செய்திகள்
ராகுல் காந்தி

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து யோசிக்கவில்லை என்று மோடி சொல்வாரா?: ராகுல் காந்தி கேள்வி

Published On 2020-10-23 12:44 GMT   |   Update On 2020-10-23 12:44 GMT
கொரோனா பொது ஊடரங்கால் ஆயிரக்கணக்கான பீகார் மக்கள் சொந்த நாட்டிற்கு உணவின்றி திரும்பியபோது பிரதமர் மோடி ஏதும் செய்யவில்லை என ராகுல் காந்தி தெரிவித்தார்.
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினர்.

பாகல்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது ‘‘பீகாரைச் சேர்ந்த ஊழியர்கள் கொரோனா ஊரடங்கின்போது சொந்த மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை கால்நடையாக உணவு மற்றும் தண்ணீர் இன்றி கடந்து வந்தபோது, மோடி உங்களுக்கு உதவி செய்தாரா? நான் உங்களை பற்றி சிந்திக்கவில்லை, முடிவில் நான் தவறு செய்துவிட்டேன் என்று சொல்வாரா?. சொந்த மாநிலம் திரும்ப பஸ், டிரக்ஸ், ரெயில் விட்டாரா?. ஏதும் இல்லை.

நான் தொழிலாளர்களை சந்திக்கும்போது, பிரதமர் மோடி இரண்டு நாட்கள் கொடுத்திருந்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றடைந்திருப்போம். குறைந்தது ஒரு நாளாவது பிரதமர் கொடுக்காதது குறித்து அவர்களால் பிரிந்து கொள்ள முடியவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News