செய்திகள்
வாக்களிக்க வந்த பாஜக தலைவர் ஜாம்யங் ஷெரிங்

லடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது- 26 உறுப்பினர் பதவிகளுக்கு 94 பேர் போட்டி

Published On 2020-10-22 04:12 GMT   |   Update On 2020-10-22 04:12 GMT
லடாக் வளர்ச்சி கவுன்சில் தேர்தல் இன்று நடைபெறும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது.
லே:

லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சிக் கவுன்சிலின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். காலை முதலே வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். 

லடாக் பாஜக தலைவரும் எம்பியுமான ஜாம்யங் ஷெரிங் காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார். வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

லடாக் வளர்ச்சி கவுன்சிலில் மொத்தம் உள்ள 30 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 4 பேர் நியமன உறுப்பினர்கள். 

26 உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 94 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவுகிறது. 26ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

ஜம்மு காஷ்மீர் பிராந்தியம் பிரிக்கப்பட்டு, லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News