செய்திகள்
விஜய ராஜே சிந்தியா நினைவு நாணயம்

விஜய ராஜே சிந்தியா நினைவு நாணயம் - பிரதமர் மோடி வெளியிட்டார்

Published On 2020-10-12 20:48 GMT   |   Update On 2020-10-12 20:48 GMT
விஜய ராஜே சிந்தியாவின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
புதுடெல்லி:

பாரதீய ஜனதா கட்சியை தொடங்கியவர்களில் விஜய ராஜே சிந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்துத்துவா கொள்கை ஈடுபாடு கொண்ட அவர், பாரதீய ஜனதா கட்சி, ஜனசங்கமாக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதில் உறுப்பினராக இருந்தார்.

குவாலியரின் மன்னர் சிவாஜிராவ் சிந்தியாவை மணம் முடித்து, குவாலியரின் ராஜமாதா என்று அன்புடன் அழைக்கப்பட்டார். அவர் 2001-ம் ஆண்டு மரணம் அடைந்தார். நேற்று அவரது 100-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அப்போது பேசிய மோடி, “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை விலக்குவது, ராமர் கோவில் எழுப்புவது போன்றவை சிந்தியாவின் கனவுகளில் முக்கியமானவையாகும். அவை இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டார்.
Tags:    

Similar News