செய்திகள்
டெல்லி ஐகோர்ட்

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கில் இன்று முதல் தினமும் விசாரணை

Published On 2020-10-04 23:03 GMT   |   Update On 2020-10-04 23:03 GMT
2 ஜி வழக்கு தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் தினமும் விசாரணை நடைபெறவுள்ளது.
புதுடெல்லி:

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. மற்றும் மத்திய அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலை தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவதாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு அளித்தார்.

குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.ஐ. தவறி விட்டது என்று அந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு மனுக் களை முன்கூட்டியே விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரி சி.பி.ஐ., அமலாக்கத் துறை சார் பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஏற்று, 2ஜி வழக்கு விசாரணை இன்று முதல் தினமும் நடைபெறும் என கடந்த செப்டம்பர் 29-ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில், 2 ஜி வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. முதலில் சி.பி.ஐ. மேல்முறையீடு வழக்கில் விசாரணை நடைபெறுகிறது.
Tags:    

Similar News