செய்திகள்
பிரதமர் மோடி

வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிக்கின்றனர்- பிரதமர் மோடி தாக்கு

Published On 2020-09-29 11:24 GMT   |   Update On 2020-09-29 13:23 GMT
வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளை அவமதிப்பதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை சாடியுள்ளார்.
புதுடெல்லி:

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்டில் நடைபெற்ற நமாமி கங்கே திட்டத்தின் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் விவசாயிகளை அவமதிப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடி பேசுகையில், “பல ஆண்டுகளாக  எதிர்க்கட்சியினர்  குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்துவார்கள் என்று சொன்னார்கள்.


ஆனால் அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் படியே இந்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. விவசாய சட்டங்களுக்கு எதிரான செயல்படும் எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்களுக்கு ஆதரவானவை. இதன்மூலம் எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரானதாக உள்ளன” என்றார்.
Tags:    

Similar News