செய்திகள்
சரத் பவார்

எங்கள் மீது மட்டும் அன்பு வைத்திருக்கிறார்கள்: வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து சரத் பவார் கருத்து

Published On 2020-09-22 15:19 GMT   |   Update On 2020-09-22 15:19 GMT
அனைத்து உறுப்பினர்களுக்கு மத்தியில் எங்கள் மீது மட்டுமே மத்திய அரசுக்கு பாசம் என வருமான வரித்துறை நோட்டீஸ் குறித்து சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறாவிடில் கூட்டத்தை புறக்கணிப்போம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவார் இதுகுறித்து கூறுகையில் ‘‘போராட்டம் நடத்தும் உறுப்பினர்களுக்கு ஒற்றுமையை காட்டுவதற்காக நான் இன்று ஏதும் சாப்பிடவில்லை. இதற்கு முன் இதுபோன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டதை நான் பார்த்ததே இல்லை. உறுப்பினர்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். துணை சபாநாயகர் விதிக்கான முன்னுரிமையை அளிக்கவில்லை.

வருமானவரித்துறையிடம் இருந்து நேற்று நோட்டீஸ் வந்தது. மற்ற உறுப்பினர்களை விட எங்கள் மீது மட்டும் பாசம் வைத்திருப்பதற்காக அவர்கள் (மத்திய அரசு) மீது மகிழ்ச்சி. தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு நாங்கள் பதில் அளிப்போம்.

2020, 2014 மற்றம் 2009-10 தேர்தலில் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. கடந்த மூன்று தேர்தல் குறித்து சுப்ரியா சுலேயிடம் விளக்கம் கேட்டது போன்று தற்போது கேட்டுள்ளனர்’’ என்றார்.
Tags:    

Similar News