செய்திகள்
மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா

இந்திய பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் வரைபடம் - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு

Published On 2020-09-15 21:26 GMT   |   Update On 2020-09-15 21:26 GMT
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்திய பிரதேசங்களை பாகிஸ்தானின் பகுதிகளாக காட்டும் கற்பனையான வரைபடத்தை பயன்படுத்தியதை தொடர்ந்து இந்தியா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது
புதுடெல்லி:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு ரஷியா தலைமையில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இந்திய பிரதேசங்களை பாகிஸ்தானின் பகுதிகளாக காட்டும் கற்பனையான வரைபடத்தை பயன்படுத்தியதாக தெரிகிறது.

இதையடுத்து பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா இந்த கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது. இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது பற்றி மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “பாகிஸ்தானின் இந்த செயல் ஒரு அப்பட்டமான மீறல். கூட்டத்தை நடத்தும் தலைமையின் ஆலோசனையை அப்பட்டமாக புறக்கணிப்பது மற்றும் கூட்டத்தின் விதிமுறைகளை மீறுவதாகும். கூட்டத்தை நடத்தும் தலைமையுடன் கலந்து ஆலோசித்த பின்னர் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய தரப்பு கூட்டத்தில் இருந்து வெளியேறியது” எனக் கூறினார்.
Tags:    

Similar News