செய்திகள்
பணவீக்கம்

இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 0.16 சதவீதமாக உயர்வு

Published On 2020-09-14 09:17 GMT   |   Update On 2020-09-14 09:17 GMT
நாட்டின் மொத்தவிலை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 0.16 சதவீதமாக உயர்ந்திருப்பதாக வர்த்தகம் மற்றும் தொழில் துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் சாதகமாக மாறியிருக்கிறது. இந்தியாவின் மொத்தவிலை பணவீக்க விகிதம் ஜூலை மாதம் 0.58 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 0.16 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. உற்பத்தியாளர்களின் விலை நிர்ணய சக்தியை மீட்டெடுப்பதை காட்டுகிறது. அத்துடன் மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதாரம் மீண்டு வருவதன் அறிகுறியாக கருதப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம் 1.17 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை பணவீக்க புள்ளிவிவரத்தை இந்த மாத இறுதியில் வெளியிட உள்ளது. 
Tags:    

Similar News