செய்திகள்
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

மும்பையில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி

Published On 2020-09-07 04:23 GMT   |   Update On 2020-09-07 04:23 GMT
மும்பை நகரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் லேசான அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் இன்று காலை 8 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மும்பைக்கு வடக்கே 102 கிமீ தொலைவில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவு கோலில் இது 3.5 அலகாக பதிவாகியிருந்ததாகவும் நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தினால் காயமோ உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதேபோல் சனிக்கிழமையன்று மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 4 முறை லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News