செய்திகள்
யுபிஎஸ்சி

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

Published On 2020-09-01 11:04 GMT   |   Update On 2020-09-01 11:04 GMT
சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் இன்று சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

தேர்வுக்கு விண்ணப்பித்த சிவில் சர்வீசஸ் தேர்வர்கள், upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று அவர்களின் யுபிஎஸ்சி ஹால் டிக்கெட்டை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது புதிய அட்டவணையின்படி, யுபிஎஸ்சி தேர்வு வரும் அக்டோபர் 4-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News