செய்திகள்
நர்மதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

நர்மதை ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளப்பெருக்கு- தயார் நிலையில் பேரிடர் மீட்பு படைகள்

Published On 2020-08-29 08:15 GMT   |   Update On 2020-08-29 08:15 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.
போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

இந்நிலையில், வெள்ளப்பெருக்கு மற்றும் மழை பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த உயர்நிலைக் கூட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் சவுகான், ‘நர்மதை நதி மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளது. ஹோசங்காபாத்தில் நர்மதை நதியில் வெள்ளப்பெருக்கு அபாய அளவை தாண்டி உள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

Tags:    

Similar News