செய்திகள்
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா

தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார் அசோக் லவாசா

Published On 2020-08-18 10:23 GMT   |   Update On 2020-08-18 10:23 GMT
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்ட அசோக் லவாசா, தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அதில், ஆகஸ்ட் 31ம் தேதி தன்னை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி கூறி உள்ளார். 

ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக லவாலா நியமனம் செய்யப்பட்டதையடுத்து, தேர்தல் ஆணைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக தற்போது பொறுப்பில் இருக்கும் திவாகர் குப்தா, வரும் 31ம் தேதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார். இதையடுத்து அந்த பொறுப்பை ஏற்பதற்காக தேர்தல் ஆணையர் பதவியை லவாசா ராஜினாமா செய்திருக்கிறார். 

ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவருக்கு கீழ், ஆறு துணைத் தலைவர்கள் அடங்கிய நிர்வாகக் குழு உள்ளது. துணைத் தலைவர் மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார். தேவைப்பட்டால் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும். 

லவாசாவின் இந்திய தேர்தல் ஆணைய பதவி நிறைவடைய இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த மூத்த தேர்தல் ஆணையராக உள்ளார். தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் பணியாற்றினால், 2022 அக்டோபரில் தலைமைத் தேர்தல் ஆணையராக ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News