செய்திகள்
உடற்பயிற்சி கூடம் (கோப்புப்படம்)

உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா இன்ஸ்டிடியூட்ஸ் ஆகியற்றிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Published On 2020-08-03 12:40 GMT   |   Update On 2020-08-03 12:40 GMT
உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா இன்ஸ்டிடியூட்களை திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பொது முடக்கம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா இன்ஸ்டிடியூட்கள் மூடப்பட்டன. தற்போது வரை அவைகளுக்கு திறக்க அனமதி வழங்கப்படவில்லை.

ஆகஸ்ட் ஐந்தாம் தேதியில் இருந்து திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது அதற்கான வழகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பிடித்துள்ள முக்கியம்சங்கள்:-

1. அறிகுறி இல்லாத நபர்களை (ஸ்டாஃப்கள் உள்பட) மட்டுமே அனுதிக்க வேண்டும். முகக்கவசம், முகம் ஷீல்டு அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

2. அனைத்து நபர்களும் ஆரோக்யா சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

3. சானிடைசர், ஆக்சி மீட்டர் வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு 95-க்கு கீழ் இருந்தால் அனுமதிக்கக் கூடாது.

4. ஆறு அடி சமூக இடைவெளியை பார்க்கிங் உள்பட எல்லா இடத்திலும் கடைபிடிக்க வேண்டும்.

5. உபகரணங்கள், பொருட்களை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கும் வகையில் நபர்களுக்கு தனித்தனித் நேரத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

6. யோகா செய்யும் இடங்களில் செருப்புகளோடு செல்ல அனுமதிக்கக் கூடது.
Tags:    

Similar News