செய்திகள்
சில்லறை நாணயங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.4 கோடியே 33 லட்சம் சில்லறை நாணயம் தேக்கம்

Published On 2020-08-02 13:27 GMT   |   Update On 2020-08-02 13:27 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.4 கோடியே 33 லட்சம் வரை சில்லறை நாணயம் தேக்கம் அடைந்துள்ளது.
திருமலை:

திருமலையில் பல்வேறு அரசு வங்கி அதிகாரிகள், தேவஸ்தான ‘பரகாமணி சேவா குலு’ திட்ட அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்றுப் பேசினார்.

அவர் பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். சில்லறை நாணயங்கள் தற்போது ரூ.4 கோடியே 33 லட்சம் வரை தேக்கம் அடைந்துள்ளது. அதை, உடனடியாக திருப்பதிக்கு அனுப்பி வைத்து, எண்ணி வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும். 2019-ம் ஆண்டு காணிக்கையாக சில்லறை நாணயங்கள் ரூ.51 கோடியே 80 லட்சம் வரை சேர்ந்தது. அந்த நாணயங்கள் எண்ணப்பட்டு வங்கிகளில் உடனடியாக டெபாசிட் செய்யப்பட்டது. அதேபோல் இந்த நாணயங்களையும் விரைவில் எண்ணி வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தேவஸ்தான பரகாமணி சேவா குலு திட்ட அதிகாரி வெங்கடய்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News