செய்திகள்
அசோக் கெலாட்

சட்டசபை கூட்ட தேதி அறிவித்தபின் குதிரைப் பேரத்தின் விலை உயர்ந்துவிட்டது: அசோக் கெலாட்

Published On 2020-07-30 17:01 GMT   |   Update On 2020-07-30 17:01 GMT
ராஜஸ்தான் சட்டசபையை கூட்டுவதற்கான அனுமதி கிடைத்த பிறகு, குதிரைப் பேரத்தின் விலை உயர்ந்து விட்டது என்று அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார்.
சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ.-க்களுடன் போர்க்கொடி உயர்த்தியதும் அவரை துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினார் அசோக் பைலட். அதில் இருந்து ராஜஸ்தான் மாநில சட்டசபையை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் அசோக் கெலாட். ஆனால் கவர்னர் சட்டசபையை கூட்ட அனுமதிக்கவில்லை.

நான்காவது முறையா கடிதம் கொடுத்தபோது 21 நாட்களை மனதில் வைத்து ஆகஸ்ட் 14-ந்தேதி சட்டசபையை கூட்ட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே குதிரைப்பேரம் பேசப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது அதன் விலை அதிகரித்து விட்டது என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசோக் பைலட் கூறுகையில் ‘‘சட்டசபை கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்படும் முன், முதல் தவணையாக 10 லட்சமும், 2-வது தவணயைாக 15 லட்சமும் பேசப்பட்டது. ஆனால், தற்போது எம்.எல்.ஏ.க்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் என்று கேட்டப்படுவதை தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். இதனுடைய அர்த்தம், குதிரைப்பேரத்தின் விலை தற்போது 25 லட்சத்தில் இருந்து அதிகரித்துள்ளது.

அனைத்து விளையாட்டுக்களும் காலதாமதம் பற்றிதான். ஆகவே, பா.ஜனதாவால் பேரம் பேச முடியும். பாஜக சார்பில் எங்கள் கட்சியின் சில தலைவர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News