செய்திகள்
மொரிஷியஸ் நீதிமன்ற கட்டிடத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்த மோடி

மொரிஷியஸ் உச்ச நீதிமன்ற கட்டிடம்- மோடி, மொரிஷியஸ் பிரதமர் இணைந்து திறந்து வைத்தனர்

Published On 2020-07-30 09:25 GMT   |   Update On 2020-07-30 09:25 GMT
நட்பு நாடுகளை மதிப்பது தான் வளர்ச்சி ஒத்துழைப்பில் இந்தியாவின் அடிப்படைக் கொள்கை என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

மொரிஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் நகரில் உச்ச நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதிய கட்டிடத்தை இந்திய பிரதமர் மோடியும், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகநாத்தும் இணைந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தனர். 

அப்போது பேசிய இந்திய பிரதமர் மோடி, இந்தியாவும் மொரிசியசும் நமது சுதந்திர நீதித்துறைகளை ஜனநாயக அமைப்புகளின் முக்கியமான தூண்களாக மதிப்பதாகவும், நவீன வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துடன் கூடிய உச்ச நீதிமன்ற புதிய கட்டிடம், இந்த மரியாதையின் அடையாளம் என்றும் குறிப்பிட்டார்.

‘இந்திய பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் பார்வை குறித்து மொரிஷியஸ் நாட்டில் முதலில் பேசினேன். ஏனென்றால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான இந்தியாவின் அணுகுமுறையின் மையத்தில் மொரிஷியஸ் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, நட்பு நாடுகளை மதிப்பது தான் வளர்ச்சி ஒத்துழைப்பின் மிக அடிப்படைக் கொள்கை’ என்றும் மோடி கூறினார்.

மொரிஷியஸ் பிரதமர் பேசும்போது, ‘மொரிஷியசின் வளர்ச்சி இலக்குகளுக்கு இந்தியா எப்போதும் உதவியாக இருந்தது. பிரதமர் மோடியின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு புதிய உச்சத்திற்கு வலுப்பெற்றுள்ளது என்றார். நாட்டின் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை நிறைவு செய்வதற்கு இந்தியா அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News