செய்திகள்
ஏர் பிரான்ஸ் விமானம்

டெல்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து பாரிஸ்க்கு 28 விமானங்கள் இயக்கம்

Published On 2020-07-16 13:30 GMT   |   Update On 2020-07-16 13:32 GMT
ஜூலை 18-ல் இருந்து ஆகஸ்ட் 1-ந்தேதி வரை பாரிஸ்க்கு ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் 28 விமான சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் மார்ச் 23-ந்தேதியில் இருந்து விமான போக்குவரத்திற்கு இந்திய அரசு தடைவிதித்திருந்தது. மே மாதம் 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி உள்நாட்டு விமான சேவை நடைபெற்று வருகிறது.

ஆனால் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31-ந்தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றாலும், வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் இந்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி, மும்பை, பெங்களூருவில் இருந்து பாரிஸ்க்கு ஜூலை 18-ந்தேதி முதல் ஆகஸ்ட் 1-ந்தேதி வரை  28 விமாங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமெரிக்காவுக்கு ஜூலை 17-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை 18 விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது தற்காலிகமானது என்றும், ஜெர்மனியிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News