செய்திகள்
தடை செய்யப்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

சீன செயலிகளுக்கு 79 கேள்விகளுடன் மத்திய அரசு நோட்டீஸ்: 22-க்குள் பதில் இல்லையெனில் நிரந்தர தடை

Published On 2020-07-10 15:41 GMT   |   Update On 2020-07-10 15:41 GMT
79 கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி தடை செய்யப்பட்ட 59 சீன செயலி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். அதில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் சீனாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீன பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற குரல் இந்தியாவில் வலுத்து வருகிறது.

மத்திய அரசின் சில துறைகள் கட்டமைப்பு வேலைகளுக்கு சீன நிறுவனத்தை அணுகமாட்டோம் என்று வெளிப்படையாக தெரிவித்தது. மேலும் டிக்டாக், ஷேர்இட் உள்பட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்தது.

‘‘இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் இந்த 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக’’ மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் 79 கேள்விகளுக்கு வரும் ஜூலை 22-ந்தேதிக்குள் பதல் அளிக்க வேண்டும். இல்லையெனில் நிரந்தரமாக இந்தியாவில் தடைசெய்யப்படும் என மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் சார்பில் 59 செயலிகளின் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய புலனாய்வு அமைப்பு மற்றும் குளோபல் சைபர் கண்காணிப்பு மூலம் அமைச்சகத்திற்கு இந்த செயலிகளின் பின்னணி மற்றும் நடவடிக்கை குறித்து தகவல்களை் கிடத்துள்ளது. தடை செய்யப்பட்ட செயலிகள் நிறுவனம் அளிக்கும் விளக்கத்தை அத்துடன் ஒப்பிட்டு பார்க்கும். ஒருவேளை முரண்பாடு இருந்தால் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உள்ளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் கார்பரேட் தோற்றம், தலைமை நிறுவனத்தின் அமைப்பு, நிதி, டேடா மேனேஜ்மென்ட், நிறுவன நடைமுறைகள் மற்றும் அவை பயன்படுத்தும் சர்வர் உள்ளிட்டவை 79 கேள்விகள் அதில் அடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News