செய்திகள்
இத்தாலி கடற்படை வீரர்கள்

மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலி கடற்படையினர் வழக்கு: சர்வதேச தீர்ப்பாயத்தில் இந்தியாவுக்கு வெற்றி

Published On 2020-07-02 15:45 GMT   |   Update On 2020-07-02 15:45 GMT
இரண்டு மீனவர்களை சுட்டுக்கொலை செய்த இத்தாலி கடற்படையினர் வழக்கில் சர்வதேச தீர்ப்பாயத்தில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த இரண்டு மீனவர்களை இத்தாலி கடற்படை வீரர்கள் இரண்டு பேர் சுட்டக்கொன்றதாக இந்தியா அவர்களை கைது செய்தது. இந்திய கடற்கரை எல்லைக்குள் வைத்து சுட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. அதேவேளையில் சர்வதேச கடல் எல்லையில் சம்பவம் நடைபெற்றது என்று இத்தாலி கூறியது.

இதுதொடர்பாக இருநாடுகளும் சர்வதேச தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று தீரப்பு வழங்கியது.

அப்போது சர்வதேச தீர்ப்பாயம் ‘‘இரண்டு இத்தாலிய கடற்படையினர் சர்வதேச விதியை மீறியுள்ளனர். இத்தாலியிடம் இருந்து உயிரிழந்தவர்களுக்காக இந்தியா இழப்பீடு கோரலாம்’’என்று தெரிவித்துள்ளது.

இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்திய நீதிமன்ற அதிகார வரம்பில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News