செய்திகள்
ராய்காட் போலீஸ் சூப்பிரண்டு அனில் பராஸ்கர் பெண் போலீஸ் ஆர்த்திக்கு சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.

பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீசுக்கு பாராட்டு

Published On 2020-06-17 03:35 GMT   |   Update On 2020-06-17 03:35 GMT
ராய்காட் மாவட்டத்தில் நிசர்கா புயலின் போது பிரசவ வலியால் தவித்த கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீசுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மும்பை :

ராய்காட் மாவட்டம் வாஷி ஹவேலி பகுதியை சேர்ந்தவர் விநாயக். கூலி தொழிலாளியான இவரது மனைவி அனுசுயா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கடந்த 3-ந்தேதி நிசர்கா புயல் கரையை கடக்க இருந்த நிலையில் பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அப்போது அனுசுயாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் விநாயக் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வாகனங்களை தேடினார். யாரும் இவருக்கு உதவி செய்ய வராத நிலையில் திகா மோகானா கடலோர போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் ஆர்த்தி என்பவர் பணிக்கு செல்ல அந்த வழியாக காரில் வந்தார்.

அப்போது ரோட்டில் நின்ற விநாயக்கிடம் விசாரித்தார். உடனே அவரது மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். தக்க சமயத்தில் அனுசுயாவை ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவருக்கு நலமுடன் குழந்தை பிறந்தது. நிசர்கா புயலில் அந்த கர்ப்பிணி பெண்ணின் வீடு சின்னாபின்னமாகியது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி தகவல் அறிந்த ராய்காட் போலீஸ் சூப்பிரண்டு அனில் பராஸ்கர் மனிதாபிமான செயலில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஆர்த்தியை வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இவர் மும்பை திலக்நகரை சேர்ந்தவர் என்பதும், பணி இடமாற்றம் செய்யப்பட்டு திகா மோகானா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News