செய்திகள்
எம்பி வீரேந்திர குமார்

மாநிலங்களவை எம்.பி. வீரேந்திர குமார் மரணம்

Published On 2020-05-29 06:52 GMT   |   Update On 2020-05-29 06:52 GMT
மாநிலங்களவை எம்.பி. வீரேந்திர குமார் மாரடைப்பு காரணமாக கோழிக்கோட்டில் மரணமடைந்தார். இவர் சாகித்ய அகாடமி உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாடு கல்பேட்டாவை சேர்ந்தவர் வீரேந்திரகுமார். மூத்த அரசியல்வாதியான இவர் உடல் நலக்குறைவால் கோழிக்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. ஜெயபிரகாஷ் நாராயணனின் சோசலிஸ்டு கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்ட வீரேந்திர குமார், பின்னர் சரத் யாதவ் தொடங்கிய லோக் தந்திரிக் ஜனதா தள் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார்.

1996 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது மத்திய மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார். தற்போது மேல்சபை எம்.பியாக இருந்தார்.

அரசியல் பணியுடன் இவர் எழுத்து துறையிலும் சிறந்து விளங்கினார். 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி உள்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
Tags:    

Similar News