செய்திகள்
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிகவேலை கிடைக்க வாய்ப்பு - பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தகவல்

Published On 2020-05-18 14:08 GMT   |   Update On 2020-05-18 14:08 GMT
சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அதிகவேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கி இருப்பது சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ள தொழிலாளர்களுக்கு அந்தந்த ஊர்களில் வேலை வாய்ப்பு கிடைக்க வழி செய்யும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-



மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்துக்காக ரூ.40 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்கி நிதி மந்திரி அறிவித்து உள்ளார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ள தொழிலாளர்களுக்கு அவர்களுடைய ஊர்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ள பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பொதுநிதியில் இருந்து சுகாதாரம் மீதான அதிகரிக்கப்பட்ட செலவினங்கள், உள்கட்டுமானம் அதிகரிப்பு, அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய்க்கான சிறப்பு பிரிவு, வட்டார அளவில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையங்கள் ஆகியவை சுகாதாரம் தொடர்பான சவால்களை திறமையுடன் எதிர்கொள்ளவும் வருங்காலத் தேவைகளை சமாளிக்கவும் நமக்கு உதவும்.

இவ்வாறு ஜே.பி.நட்டா ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News