செய்திகள்
கோப்பு படம்

குவிந்த மக்கள் - முடங்கிய ஐஆர்சிடிசி இணைய தள பக்கம்

Published On 2020-05-11 12:18 GMT   |   Update On 2020-05-11 12:18 GMT
ரெயிலில் பயணச்சீட்டு முன்பதிவு 4 மணிக்கு தொடங்கிய நிலையில் லட்சக்கணக்கானோர் இணையதளபக்கத்தில் குவிந்ததால் ஐஆர்சிடிசி பக்கம் முடங்கியது.
புதுடெல்லி:

மார்ச் மாதம் 24-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் நாளை முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 30 ரெயில்கள் மட்டும் 20-ந்தேதி வரை இயக்குவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. நாளை முதல் ரெயில் ஓடத் தொடங்கும். நாடு முழுவதும் 15 முக்கிய ரெயில் நிலையங்களுக்கு இடையே மட்டுமே இந்த ரெயில்கள் இயக்கப்படுகின்றன.



இந்த ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு ஐஆர்சிடிசி இணையதள பக்கத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் குவிந்ததால் ஐஆர்சிடிசி பக்கமே முடங்கியது. 

இதையடுத்து உடனடியாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனால், முடயங்கிய இணையதள பக்கம் சரிசெய்யப்பட்டு இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.  
Tags:    

Similar News