செய்திகள்
திருப்பதி கோவில்

1300 துப்புரவு தொழிலாளர்களுக்கு மேலும் ஒரு மாதம் பணி நீட்டிப்பு- திருப்பதி தேவஸ்தானம்

Published On 2020-05-04 11:43 GMT   |   Update On 2020-05-04 11:43 GMT
வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட 1300 துப்புரவு தொழிலாளர்களுக்கு மேலும் ஒரு மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வந்த 1300 துப்புரவு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததாக வந்த தகவலால் ஊழியர்கள் அனைவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

திருப்பதி தேவஸ்தானத்தில பணிபுரிந்து வந்த 1300 துப்புரவு தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததாக கூறப்பட்டு வருகிறது.

அது தவறான தகவலாகும். ஏப்ரல் 30-ந் தேதியுடன் சம்பந்தப்பட்ட துப்புரவு தொழிலாளர்களை ஒப்பந்தம் எடுத்தவர்களின் ஒப்பந்தம் நிறைவடைந்தது.

ஊரடங்கு நேரத்தில் புதிய ஒப்பந்தம் அமைக்க முடியாததால், ஊரடங்கு முடிந்தபின் மறு ஒப்பந்தம் அமைக்க இருந்தோம். ஆனால் அதற்குள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகத்தில் தவறான செய்திகள் வெளியாகி வருகிறது. எனவே மேலும் ஒரு மாதத்திற்கு ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்துள்ளோம்.

ஊரடங்கு நேரத்திலும் கொரோனா பரவாமல் இருப்பதற்காகவே ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.

இப்பினும் கோவிலில் அனைத்து பூஜைகளும் வழக்கம் போல் நடக்கிறது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தனது குடும்பத்தினருடன் 2 வாரத்துக்கு ஒருமுறை அபிஷேக சேவையில் பங்கேற்பது வழக்கம்.

அவ்வாறு கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அபிஷேக சேவையில் தனது மனைவி, தாயாருடன் அவர் பங்கேற்றார்.

அந்த நேரத்தில் அவரது பிறந்தநாள் அமைந்தது. ஆனால் இதுகுறித்தும் சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி வருகிறது.

அவர் தலைவர் என்பதால் எந்த நேரத்திலும் கோவிலுக்கு வந்து பூஜைகளில் பங்கேற்கும் அதிகாரம் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News