செய்திகள்
ப.சிதம்பரம்

இது ஏட்டுச் சுரைக்காய் விவாதம்... கடன் தள்ளுபடி விவகாரம் குறித்து ப.சிதம்பரம் கருத்து

Published On 2020-04-30 10:39 GMT   |   Update On 2020-04-30 10:39 GMT
ரூ 68,000 கோடி வாரா கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்து உள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

கடன் தள்ளுபடி தொடர்பாக எழுந்துள்ள விவாதம் குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அடுத்தடுத்த டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ரூ 68,000 கோடி வாரா கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்து உள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை, மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெஹுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா.

மத்திய அரசு இந்த மாபெரும் தவற்றை திருத்த  ஒரே வழிதான் உண்டு. ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News