செய்திகள்
அர்னாப் கோஸ்வாமி

அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்ட விவகாரம் - மும்பையில் 2 பேர் கைது

Published On 2020-04-23 10:39 GMT   |   Update On 2020-04-23 10:39 GMT
ரிபப்ளிக் டிவி நிறுவனர் மற்றும் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி மற்றும் அவரது மனைவியை தாக்கியது தொடர்பாக மும்பை போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
மும்பை:

மும்பையில் உள்ள தனது ஸ்டுடியோவிலிருந்து திரும்பி வரும் வழியில் இளைஞர் காங்கிரஸ் ஊழியர்களால் தாக்கப்பட்டதாக ரிபப்ளிக் டிவி நிறுவனர் மற்றும் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அர்னாப், அவரது மனைவி மற்றும் தொலைக்காட்சி ஆசிரியர் சாமியபிரதா ரே ஆகியோர் காரில் ஸ்டுடியோவில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் கொரோலாவில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ரிபப்ளிக் டிவி தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக, அர்னாப் வெளியிட்டுள்ள வீடியோவில் காங்கிரஸ் தலைவர்களை இந்த தாக்குதலுக்கு குற்றம் சாட்டினார். அவர் வீடியோவில், சோனியா காந்தி  நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், நீங்கள் இப்போது நாட்டின் மிகப்பெரிய கோழை. என்னை எதிர்கொள்ள உங்களுக்கு தைரியம் இல்லை எனக்கு ஏதாவது நடந்தால், சோனியா காந்தி பொறுப்பாவார் என கூறியிருந்தார்.

பால்கர் பகுதியில் நடந்த கொலை குறித்த செய்தி விவாதத்தில், அர்னாப் சோனியா காந்தியின் மவுனத்தை குறை  கூறியதாக கூறப்படுகிறது. இது ஏராளமான காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து விமர்சனங்களைத் ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தனது மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மும்பை போலீசில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமி கொடுத்த புகாரின் பேரில் 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News