செய்திகள்
கொரோனா வைரஸ்

ஏப்ரல் 15-ந்தேதில் இருந்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் எண்ணத்தில் யாரும் இருக்க வேண்டாம்: மராட்டிய மந்திரி

Published On 2020-04-06 14:50 GMT   |   Update On 2020-04-06 14:50 GMT
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து ஊடரங்கு உத்தரவு நீக்கப்படும் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என மகாராஷ்டிர மாநில மந்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4200-ஐ தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 111 ஆகியுள்ளது.

மாநிலத்தை பொறுத்தவரைக்கும் மகாராஷ்டிராவில் 868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே 21 நாட்கள் கொண்ட ஊரடங்கு உத்தரவு முடியும் தருவாயில் உள்ளது. வருகிற 14-ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பின் ஊரடங்கு உத்தரவு வாபஸ் வாங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரெயில்வேதுறை முன்பதிவை தொடங்கியுள்ளன. ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனாவில் தாக்கம் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்க்கப்படுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் டோபே ‘‘எந்தவொரு நபரும் ஏப்ரல் 15-ந்தேதியில் இருந்து ஊடரங்கு உத்தரவு முழுவதுமாக நீக்கப்படும் என்ற எண்ணத்தில் இருக்க வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார். நொய்டா மாவட்டத்தில் ஏற்கனவே ஏப்ரல் 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News