செய்திகள்
போராட்டம் நடந்துவரும் இடத்தின் அருகில் பற்றி எரியும் தீ

டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு?

Published On 2020-03-22 05:28 GMT   |   Update On 2020-03-22 05:28 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெறும் பகுதியின் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுடெல்லி:

டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு மாதத்துக்கும் மேலாக இஸ்லாமியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி கேட்டுக் கொண்டபடி மக்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் இன்று காலை 7 மணி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்கள் எவ்வித போக்குவரத்துமின்றி வெறிச்சோடி கிடக்கின்றன.

மக்கள் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஷாகீன் பாக் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடைபெறும் பகுதியின் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்தோர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News