செய்திகள்
யோகி ஆதித்யாநாத்

உ.பி.யில் பாஜக முதல்வராக 3 ஆண்டுகள் பதவி வகித்து யோகி ஆதித்யாநாத் சாதனை

Published On 2020-03-18 10:05 GMT   |   Update On 2020-03-18 10:05 GMT
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பில் தொடர்ந்து 3 ஆண்டுகள் முதல் மந்திரியாக பதவி வகித்தவர் என்ற சிறப்பை யோகி ஆதித்யாநாத் பெற்றுள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநில சட்டசபைக்கு 2017-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 403 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 312 இடங்களில் அமோக வெற்றி பெற்றதையடுத்து 19-3-2017 அன்று அம்மாநிலத்தின் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்றது.

உத்தர பிரதேசம் மாநில அரசியல் வரலாற்றில் அங்கு பாஜக மிகவுக் குறுகிய காலம் வரை மட்டும் ஆட்சி பொறுப்பில் இருந்துள்ளது.

யோகி ஆதித்யாநாத்துக்கு முன்னர் கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங் ஆகியோர் தலைமையில் இங்கு பாஜக ஆட்சி அமைந்தது.

24-6-1991 அன்று உ.பி. முதல் மந்திரியாக பதவியேற்ற கல்யாண் சிங் தலைமையிலான முதல் ஆட்சிக்காலம் 6-12-1992 அன்று நிறைவடைந்தது. பின்னர், 21-9-1997 முதல் 12-11-1999 வரை அவர் அம்மாநிலத்தில் இரண்டாவது முறை முதல்வராக இருந்தார்.

அவருக்கு பின்னர் பாஜக சார்பில் 12-11-1999 அன்று முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ராம் பிரகாஷ் குப்தா 28-10-2000 வரை அப்பதவியில் நீடித்தார்.    
    
தற்போது ராணுவ மந்திரியாக இருக்கும் ராஜ்நாத் சிங் 28-10-2000 முதல் 8-3-2002 வரை உ.பி. முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். இதற்கு முன்னர் எந்த பாஜக முதல் மந்திரியும் தொடர்ச்சியாக இரண்டாண்டுகள் கூட பதவியில் இருந்ததில்லை.

இந்நிலையில், 19-3-2017 அன்று அம்மாநிலத்தின் முதல் மந்திரியாக  பதவி ஏற்ற யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மந்திரிசபை நாளை (வியாழக்கிழமை) தனது ஆட்சியின் மூன்றாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளது.

தற்போது உத்தர பிரதேசம் மாநில சட்டமன்றத்தின் மேல்சபை உறுப்பினராக இருக்கும் யோகி ஆதித்யாநாத், இதற்கு முன்னதாக 1998, 1999, 2004, 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் கோரக்பூர் தொகுதியில் பாராளுமன்ற மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டு, தொடர்ந்து 5 முறை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோ நகரில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த யோகி ஆதித்யாநாத், தனது மூன்றாண்டு கால ஆட்சியில் மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.

அனுமதியின்றி இயங்கி வந்த இறைச்சி கூடங்களை மூடியது மற்றும் மத்திய அரசின் அனைத்து முதன்மையான திட்டங்களையும் இம்மாநிலத்தில் முழு அளவில் நிறைவேற்றியது போன்ற தனது தலைமையிலான அரசின் சாதனைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் மோடியின் ஆதரவுடன் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையையும் பெறும் வகையில் மாநிலத்தை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்திச் சென்றதுடன் சுமார் 25 கோடி மக்கள் கூடிய கும்பமேளா விழாவை வெகு சிறப்பாக நடத்தி இருக்கிறோம் என்றும் யோகி ஆதித்யாநாத் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News