செய்திகள்
மத்திய அரசு

மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க திட்டமா? - மத்திய அரசு பதில்

Published On 2020-03-13 20:27 GMT   |   Update On 2020-03-13 20:27 GMT
மாட்டிறைச்சி, மீன் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் திட்டம் இல்லை என மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி சஞ்சீவ் குமார் பல்யான் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி சஞ்சீவ் குமார் பல்யான் பதில் அளித்தார். அவர் கூறுகையில், “இந்தியா ரூ.70 ஆயிரம் கோடிக்கு மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதி செய்கிறது. மாட்டிறைச்சி, மீன் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் திட்டம் இல்லை. கோசாலைகளை பராமரிப்பது மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதற்கு கால்நடை பராமரிப்பு வாரியம் நிதி ஒதுக்க முடியாது” என்றார். 
Tags:    

Similar News