செய்திகள்
பாகீரதி அம்மா

7-ம் வகுப்பு தேர்வு எழுதும் 105 வயது மூதாட்டி

Published On 2020-03-13 08:33 GMT   |   Update On 2020-03-13 08:33 GMT
உலக மகளிர் தினத்தன்று சிறந்த பெண்மணிக்கான ஜனாதிபதி விருது பெற்ற பாகீரதி அம்மா 7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருவதாகவும் தேர்வில் வெற்றி பெற்றதும் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுவேன் என்றும் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் முதியோர் கல்வி திட்டத்தில் வயது முதிர்ந்த மூதாட்டிகள் பலரும் படித்து வருகிறார்கள்.

கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாகீரதி அம்மா என்ற 105 வயது மூதாட்டி முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து 4-ம் நிலை தேர்வில் வெற்றி பெற்றார். அவர், அடுத்து 7-ம் வகுப்பு தேர்வு எழுத விரும்பினார்.

இதற்காக கேரள முதியோர் கல்வி திட்ட இயக்குனர், மூதாட்டி பாகீரதி அம்மா வீட்டிற்கு நேரில் சென்று தேர்வு விண்ணப்பத்தை வழங்கினார்.

பாகீரதி அம்மா பற்றிய தகவல்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி தனது மன்கிபாத் நிகழ்ச்சியில் பாகீரதி அம்மாவின் தன்னம்பிக்கை, முதிய வயதிலும் கல்வியில் காட்டும் ஆர்வம் பற்றி பாராட்டி பேசினார்.

இந்நிலையில் பாகீரதி அம்மாவிற்கு உலக மகளிர் தினத்தன்று சிறந்த பெண்களுக்கு அளிக்கப்படும் சிறந்த பெண்மணிக்கான ஜனாதிபதி விருது அறிவிக்கப்பட்டது.

விருது பெற்ற பாகீரதி அம்மா 7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறார். அவர், கூறியதாவது:-

7-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வருகிறேன். தேர்வில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். வெற்றி பெற்றதும் 10-ம் வகுப்பு தேர்வையும் எழுதுவேன் என்றார்.

பாகீரதி அம்மாவுக்கு இதுவரை ஆதார் கார்டோ, அரசின் முதியோர் ஓய்வூதியமோ கிடைக்கவில்லை. அவரை பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியான பிறகு இப்போது முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை மாவட்ட நிர்வாகம் வழங்கி உள்ளது. இனி அவருக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் கிடைக்கும்.
Tags:    

Similar News