செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

Published On 2020-02-28 13:39 GMT   |   Update On 2020-02-28 15:48 GMT
தலைநகர் டெல்லியில் அமைதி திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.
புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்ற வன்முறை நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை மந்திரி அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து டெல்லி வன்முறை தொடர்பாக மனு அளித்தனர். அதில், வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத உள்துறை மந்திரி உடனடியாக பதவி விலக சொல்லும்படி வலியுறுத்தி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அமைதி திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டு, ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனதா தளம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், டெல்லியில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரக்காரர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News