செய்திகள்
புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர் சுரேஷ் கண்ணா

ஆமதாபாத்தில் டிரம்புக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன? - சமையல் கலை நிபுணர் விளக்கம்

Published On 2020-02-23 22:12 GMT   |   Update On 2020-02-23 22:12 GMT
ஆமதாபாத்தில் டிரம்புக்கு குஜராத்தின் புகழ்பெற்ற உணவுப்பொருளான ‘காமன்’ மற்றும் பிரக்கோலி உள்ளிட்ட உணவு பதார்த்தங்களை தயாரித்து வழங்குவதாக சுரேஷ் சமையல் கலை நிபுணர் கண்ணா தெரிவித்தார்.
ஆமதாபாத்:

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோருடன் 2 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். ஆமதாபாத்தில் வந்திறங்கும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலையில் ஆக்ரா புறப்படுகிறார்.

ஆமதாபாத்தில் தங்கியிருக்கும்போது டிரம்புக்கு வழங்கப்படும் உணவுகளை, அங்குள்ள பார்ச்சூன் லேண்ட்மார்க் ஓட்டலில் பணியாற்றும் புகழ்பெற்ற சுரேஷ் கண்ணா என்ற சமையல் கலை நிபுணர் தலைமையிலான குழுவினர் தயாரிக்கின்றனர். அந்தவகையில், குஜராத்தின் புகழ்பெற்ற உணவுப்பொருளான ‘காமன்’ மற்றும் பிரக்கோலி, சோள சமோசா, காஜு கத்லி, பலவகையான தேநீர் என விதவிதமான பதார்த்தங்களை தயாரித்து டிரம்புக்கு வழங்குவதாக சுரேஷ் கண்ணா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நாளை (இன்று) எங்கள் ஓட்டலுக்கு மிகவும் முக்கியமான தினமாகும். டிரம்ப் மற்றும் அவருடன் வரும் விருந்தினர்களுக்கு வழங்குவதற்காக கிரீன் டீ, லெமன் டீ உள்ளிட்ட உயர்ந்த ஒரு தேநீர் பட்டியலை நாங்கள் தயாரித்து உள்ளோம். ‘காமன்’ என்பது குஜராத்தின் புகழ்பெற்ற உணவு. இதை நாங்கள் லேசான ஆவியில் வேகவைத்து டிரம்புக்கு வழங்குவோம்’ என்று கூறினார்.
Tags:    

Similar News