செய்திகள்
மிக்-29கே ரக விமாமனம்

கோவாவில் மிக் ரக விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உயிர் தப்பினார்

Published On 2020-02-23 10:26 GMT   |   Update On 2020-02-23 10:26 GMT
கோவா மாநிலத்தில் கடற்படைக்கு சொந்தமான மிக்-29கே ரக விமானம் திடீரென விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கோவா மாநிலம் அரபிக் கடலில் கடற்படை சார்பில் விமானம் மூலம் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கமானது. இன்று காலை 10.30 மணி அளவில் இரண்டு என்ஜின், ஒரு சீட் கொண்ட மிக்-29கே ரக விமானத்தை விமான ஐஎன்எஸ் ஹன்சா தளத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் அரபிக் கடற்பகுதியில் பறந்த போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென விழுந்து நொறுங்கியது. கீழே விழுவதற்குள் விமானி சுதாரித்து தப்பித்துக் கொண்டார்.

விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த மூன்று மாதத்திற்குள் இரண்டாவது விபத்து இதுவாகும். கடந்த ஆண்டும் நவம்பர் மாதம் இதே ரக விமானம் இரண்டு பயணிகளுடன் செல்லும்போது விபத்துக்குள்ளானது. இதிலும் இரண்டு விமானிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Tags:    

Similar News