செய்திகள்
ஐதராபாத் செகந்திராபாத் மெட்ரோ ரெயில்

ஐதராபாத்-செகந்திராபாத் இடையே 69 கி.மீட்டர் தூரம் மெட்ரோ ரெயில்

Published On 2020-02-08 07:23 GMT   |   Update On 2020-02-08 07:23 GMT
ஐதராபாத் - செகந்திராபாத் இடையே 69.2 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் செல்கிறது. இதன் மூலம் நாட்டில் 2-வது நீண்ட தூரமாக செல்லும் மெட்ரோ ரெயிலை இயக்கும் நகரம் ஐதராபாத் என்ற பெயரை பெற்றிருக்கிறது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மெட்ரோ ரெயில் சேவை செயல்பட்டு வருகிறது. இதில் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு 780 முறை ரெயில் சென்று வருகிறது.

ஐதராபாத்- செகந்திராபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் சேவையை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வந்தது. இதில் 80 சதவீத பணிகள் முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. மீதமுள்ள பணிகளும் நிறைவடைந்தது.

இதையடுத்து மீதமுள்ள 11 கி.மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரெயில் சேவையை நேற்று முதல்வர் சந்திரசேகரராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஜூப்லி பஸ் நிலையத்தில் இருந்து மகாத்மா காந்தி பஸ் நிலையம் வரையிலான தூரத்துக்கு மெட்ரோ ரெயில் ஓடியது. இதில் 9 ரெயில் நிலையங்கள் உள்ளன. முக்கிய இடங்களான காந்தி மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, செகந்திராபாத் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் ஐதராபாத் - செகந்திராபாத் நகரங்களை இணைக்கும் வகையிலான மெட்ரோ ரெயில் பணி முழுமைப்பெற்று இயக்கப்பட்டு வருகிறது.

ஐதராபாத் - செகந்திராபாத் இடையே 69.2 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் செல்கிறது. இதன் மூலம் நாட்டில் 2-வது நீண்ட தூரமாக செல்லும் மெட்ரோ ரெயிலை இயக்கும் நகரம் ஐதராபாத் என்ற பெயரை பெற்றிருக்கிறது.

ஐதராபாத் - செகந்திராபாத் இடையே சாலை வழியாக சென்றால் 45 நிமிடங்கள் ஆகும். ஆனால் மெட்ரோ ரெயிலில் வெறும் 16 நிமிடங்களில் சென்றுவிடலாம்.
Tags:    

Similar News