செய்திகள்
காஷ்மீர் கவர்னர்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில் 200 மக்கள் நலத்திட்டப் பணிகள் நிறைவு

Published On 2020-02-07 14:18 GMT   |   Update On 2020-02-07 14:18 GMT
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில் 200 மக்கள் நலத்திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு கிரிஷ் சந்திரா மர்மு கவர்னராக நியமிக்கப்பட்டார். அவருக்கு நிர்வாக ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்கு 2 அதிகாரிகளையும் மத்திய அரசு நியமித்தது.

காஷ்மீர் யூனியன் பிரதசேதமாக மாற்றப்பட்ட பிறகு கவர்னரின் உத்தரவின்படி பல்வேறு மக்கள் நலத்திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. 



சாலைகள், குடிநீர், மேம்பாலங்கள், விளையாட்டு அரங்கங்கள், கல்வி நிறுவனங்கள் என 5 ஆயிரத்து 963 கோடி ரூபாய் மதிப்பிட்டில் 2,273 மக்கள் நலத்திட்டங்களுக்கான பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் 200 நலத்திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்கழக அதிகாரி தெரிவித்துள்ளார். 

மேலும், 963 திட்டப்பணிகள் நடப்பு நிதியாண்டிற்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News