செய்திகள்
மக்களவை

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2020-02-07 10:19 GMT   |   Update On 2020-02-07 10:19 GMT
பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பேசியது குறித்து மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்த கருத்தால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியது. கேள்வி நேரத்தின் போது ராகுல் காந்தி கேள்வி எழுப்பியபோது குறுக்கிட்ட ஹர்ஷ்வர்தன், தேர்தல் பிரசாரத்தின் போது மோடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்த காங்கிரஸ் தலைவருக்கு எனது கண்டனத்தை  பதிவுசெய்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

அப்போது, பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி  பேசியது குறித்து மத்திய மந்திரி ஹர்ஷ்வர்த்தன் தெரிவித்த கருத்தால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, நண்பகல் 1 மணி வரை மக்களவையை ஒத்திவைத்தார்.

ஹர்ஷ்வர்தனின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
Tags:    

Similar News