செய்திகள்
பாராளுமன்றம்

ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை - மத்திய அரசு

Published On 2020-02-05 08:28 GMT   |   Update On 2020-02-05 08:37 GMT
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புது டெல்லி:

தமிழகத்தில் உள்ள இலங்கையில் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தன. 

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்தார். இது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், உரிய நேரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும்  அமித் ஷா உறுதியளித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து புதுச்சேரி அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் ‘அரசியலமைப்பு 9ன் கீழ் இரட்டை குடியுரிமை வழங்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யும் திட்டம் ஏதுமில்லை’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News