செய்திகள்
குரங்கு உடையில் இருவர்

குரங்குகளை பயமுறுத்த கரடி உடை அணிந்த கிராம மக்கள்

Published On 2020-01-30 06:52 GMT   |   Update On 2020-01-30 06:52 GMT
உத்தரபிரதேசத்தில் குரங்குகள் தொல்லையிலிருந்து விடுபடும் நோக்கில் அவற்றை பயமுறுத்த கிராம மக்கள் கரடி உருவத்தைப் போன்ற உடை அணிந்த சம்பவம் சற்று வியப்பை ஏற்படுத்தியது.
லக்னோ:

வனவிலங்கான குரங்கின் சேட்டைகள் பற்றி அனைவரும் அறிந்ததே. குரங்குகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் வனப்பகுதிகளின் அருகில் உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் அவைகளின் குறும்புத்தனத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

பொதுவாக குடியிருப்பு பகுதிகளில் நுழையும் குரங்குகள் வீடுகளில் உள்ள உணவுப்பொருட்களை திண்பது, பொருட்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை நாம் அறிந்திருப்போம். குரங்குகள் விளை பயிர்களையும் சேதப்படுத்தக்கூடியவை.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் சிக்கந்தர்பூர் கிராமத்தில், குரங்குகளை பயமுறுத்தி விரட்ட கரடி உருவத்தைப் போன்று உடை அணிந்து அக்கிராம மக்கள் உலா வருகின்றனர்.  



இதுகுறித்து அக்கிராம தலைவர் கூறுகையில், ‘ இப்பகுதியில் சுமார் 2,000 குரங்குகள் உள்ளன. அவை மக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக குழந்தைகளை குறிவைத்து சேட்டைகள் செய்து அவர்களை தாக்குகின்றன. இதுவரை 150 முறைக்கும் மேல் அவைகளால் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. 

இது குறித்து வனத்துறையினரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களிடம் பணம் வசூலித்து, நாடக கலைஞர்களிடமிருந்து மூன்று கரடி உடைகள் வாங்கியுள்ளோம். இருவர் இந்த கரடி உடைகளை அணிந்து ரோந்து வருகின்றனர். இந்த யோசனை சற்று பயனுள்ளதாகவே உள்ளது’ என தெரிவித்தார்.
Tags:    

Similar News