செய்திகள்
டெல்லி பாட்டியாலா கோர்ட்

நிர்பயா வழக்கு- குற்றவாளிகள் 2 பேர் புதிய முறையீடு

Published On 2020-01-24 08:44 GMT   |   Update On 2020-01-24 08:44 GMT
நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் வினய் பவன், அக்‌ஷய் குமார் சிங் சார்பில் வக்கீல் ஏ.பி.சிங் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் இன்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
புதுடெல்லி:

புதுடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, அக்‌ஷய் குமார் சிங், வினய் சர்மா ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.



தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் 4 பேரையும் தூக்கிலிட திகார் சிறை நிர்வாகம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வினய் பவன், அக்‌ஷய் குமார் சிங் சார்பில் வக்கீல் ஏ.பி.சிங் என்பவர் இன்று டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், மறு சீராய்வு மனு, கருணை மனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை திகார் சிறை நிர்வாகம் தர மறுப்பதாக கூறி உள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.

Tags:    

Similar News