செய்திகள்
ஆதித்ய தாக்கரே

மகாராஷ்டிராவில் வன சுற்றுலாவை மேம்படுத்த குழு: ஆதித்ய தாக்கரே தகவல்

Published On 2020-01-20 02:05 GMT   |   Update On 2020-01-20 02:05 GMT
தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் சுற்றுலாவை மேம்படுத்த வனம் மற்றும் சுற்றுலாத்துறை இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே கூறினார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் சுற்றுலாவிற்காக வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் வருகிறார்கள். இந்தநிலையில், மாநிலத்தில் வன சுற்றுலாவை மேம்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சுற்றுலாத்துறை மந்திரி ஆதித்ய தாக்கரே தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி ஆதித்ய தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் வன பாதுகாப்பை அதிகரிப்பதோடு அங்கு சுற்றுலாவையும் மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம். தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களில் சுற்றுலாவை மேம்படுத்த வனம் மற்றும் சுற்றுலாத்துறை இரண்டும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக குழு அமைக்கப்பட உள்ளது.

இந்த குழுவில் சுற்றுலா மற்றும் வனத்துறையை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். தற்போதுள்ள சுற்றுலா மையங்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் அவற்றை வலுப்படுத்த முடியும். மேலும் சுற்றுலா மேம்பாடு சுற்றுச்சூழலுடன் உகந்ததாக இருக்க வேண்டும்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் காடுகளையும் சுற்றுலா தலங்களாக மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News