செய்திகள்
ஓமன் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத்

ஓமன் சுல்தான் மறைவுக்கு நாளை அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் - மத்திய உள்துறை

Published On 2020-01-12 06:02 GMT   |   Update On 2020-01-12 06:02 GMT
ஓமன் நாட்டு தலைவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவுக்கு நாளை அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சியாளராக இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். ஓமன் நாட்டின் சுல்தானான கபூஸ் பின் சையத் இயற்கை எய்தினார். கபூஸின் மறைவிற்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஓமன் நாட்டு சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவுக்கு நாளை ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓமன் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவுக்கு நாளை ஒருநாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும். தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும். நாளைய பொழுதுபோக்கு நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஓமன் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News