செய்திகள்
குழந்தைகள் உயிரிழப்பு

குஜராத் அரசு ஆஸ்பத்திரியில் 111 குழந்தைகள் உயிரிழப்பு

Published On 2020-01-05 21:35 GMT   |   Update On 2020-01-05 21:35 GMT
ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகள் இறந்த நிலையில், குஜராத் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 111 குழந்தைகள் இறந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஆமதாபாத்:

ராஜஸ்தான் மாநிலம் கோடா அரசு ஆஸ்பத்திரியில் சமீபத்தில் 100 குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பண்டித் தீனதயாள் உபாத்யா ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 111 குழந்தைகள் இறந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இதுபற்றி ஆஸ்பத்திரி சூப்பிரண்டு மனிஷ் மேத்தா நேற்று கூறுகையில், இந்த ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் பிரசவத்திற்கு அனுமதிப்பது, எடை குறைவாக குழந்தை பிறப்பது மற்றும் மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்து உள்ளதாகவும், இதனை தடுக்க ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். 
Tags:    

Similar News