செய்திகள்
பச்சிளம் குழந்தை

ராஜஸ்தான் மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

Published On 2020-01-04 03:31 GMT   |   Update On 2020-01-04 03:31 GMT
ராஜஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் மட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் சமீப காலமாக தொடர்ந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக கோட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

இந்நிலையில், பண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மட்டும் கடந்த டிசம்பர் மாதத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன. கூடுதல் மாவட்ட ஆட்சியர் நேற்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, குழந்தைகளின் இறப்பு குறித்த எண்ணிக்கை தெரியவந்தது. மருத்துவ அலட்சியம் காரணமாக குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

ஆனால், இதனை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. ஏற்கனவே தீவிர நோய் பாதிப்பினால் சேர்க்கப்பட்ட குழந்தைகள், பல்வேறு காரணங்களால் இறந்திருப்பதாகவும், மருத்துவமனையின் பொறுப்பற்ற தன்மையால் அல்ல என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளது. 
Tags:    

Similar News