செய்திகள்
கோப்புப்படம்

மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்கள்

Published On 2019-12-25 07:19 GMT   |   Update On 2019-12-25 07:19 GMT
மத்தியபிரதேச மாநிலத்தில் 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர்கள் அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போபால்:

மத்தியபிரதேச மாநிலம் சிதி மாவட்டத்தில் உள்ள ஜமோடி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

சம்பவத்தன்று மாணவி தனது தோழிகளுடன் மார்க்கெட்டுக்கு சென்றார். பின்னர் அனைவரும் வீடு திரும்பினர். தோழிகள் வீட்டுக்கு சென்ற நிலையில் மாணவி மட்டும் தனியாக வீட்டை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் திடீரென மாணவியை தூக்கி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கடத்தி சென்று கற்பழித்துள்ளனர். அதை ஒரு வாலிபர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

நடந்த சம்பவத்தை போலீசில் புகார் செய்தால் கற்பழிப்பு வீடியோவை வெளியே பரப்பி விடுவதாக கூறி மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதாள்.

பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்த 4 வாலிபர்களை கைது செய்தனர். இவர்கள் 4 பேருமே 16 மற்றும் 17 வயது உடையவர்கள. கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

ஒடிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது முகம் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News