செய்திகள்
டெல்லி தீ விபத்து

டெல்லி நரேலா தொழிற்பேட்டை காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

Published On 2019-12-24 04:36 GMT   |   Update On 2019-12-24 04:36 GMT
டெல்லி தொழிற்பேட்டையில் உள்ள காலணி தொழிற்சாலையில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி:

டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

ஒரு தொழிற்சாலையில் பற்றிய தீ விரைவாக அணைக்கப்பட்டது. மற்றொரு தொழிற்சாலையான, காலணி தொழிற்சாலையில் பிடித்த தீ மளமளவென பரவி, கடுமையான புகை மூட்டம் எழுந்ததால் தீயை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்தது. நீண்டநேரம் தீயணைப்பு பணி நடைபெற்றது. 
Tags:    

Similar News