செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடத்திய எம்.பி.க்கள்

பாராளுமன்ற வளாகத்தில் கம்யூ. எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

Published On 2019-12-10 06:38 GMT   |   Update On 2019-12-10 06:38 GMT
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுடெல்லி:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாணவர் அமைப்பினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காந்தி சிலை அருகே, எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
Tags:    

Similar News