செய்திகள்
அட்மிரல் கரம்பீர் சிங்

இந்திய பெருங்கடலில் எப்போதும் வலம் வரும் சீன கப்பல்கள் -இந்திய கடற்படை தளபதி

Published On 2019-12-03 07:47 GMT   |   Update On 2019-12-03 10:25 GMT
இந்திய பெருங்கடல் பகுதியில் ஏழெட்டு சீன கப்பல்கள் எப்போதும் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படை தளபதி கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கடற்படையின் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கடற்படையின் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் கூறியதாவது:- 

கடந்த ஐந்து ஆண்டுகளில் கடற்படைக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டின் செயல்களும் நம்மை பாதிக்கக்கூடாது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஏழெட்டு சீனக்கப்பல்கள் எப்போதும் உலவுகின்றன. எந்த சவாலையும் சந்திக்க கடற்படை தயாராக உள்ளது. 

இந்திய கடற்படைக்காக 41 போர்க்கப்பல்கள் வாங்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீண்ட கால திட்டமான 3 விமான தாங்கி கப்பல்களும் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. ஒத்த கருத்துக்களை கொண்ட நாடுகளுடன் இணைந்து செயலாற்ற தயாராக உள்ளோம். 

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News