செய்திகள்
ஐ.ஆர்.சி.டி.சி

சதாப்தி, துரந்தோ, ராஜதானி ரெயில்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு

Published On 2019-11-15 10:21 GMT   |   Update On 2019-11-15 10:21 GMT
அதிவேக ரெயில்களான சதாப்தி, துரந்தோ, ராஜதானி ரெயில்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு ரெயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் பயணிகள் வசதிக்காக அதிவேகமாக செல்லும் சதாப்தி, துரந்தோ, ராஜதானி என்ற சொகுசு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 

சாதாரண எக்ஸ்பிரஸ் ரெயில்களை விட மேற்கண்ட ரெயில்களில் பயணிக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல் இந்த ரெயில்களில் உணவுப் பொருட்களின் விலையும் மற்ற ரெயில்களை விட அதிகம்.

இந்நிலையில், சதாப்தி, துரந்தோ, ராஜதானி ரெயில்களில் உணவுப்பொருட்களின் விலையை உயர்த்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில், ஒரு டீ ரூ.35, (ரூ.6 உயர்வு) காலை சிற்றுண்டி ரூ.140 (ரூ.7 உயர்வு), மதிய உணவு மற்றும் இரவு உணவு ரூ.245 (ரூ.15 உயர்வு) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகளில், ஒரு டீ ரூ.20 (ரூ.5 உயர்வு), காலை சிற்றுண்டி ரூ.105 (ரூ.8 உயர்வு), மதிய உணவு மற்றும் இரவு உணவு ரூ.185 (ரூ.10 உயர்வு) எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விலையேற்றம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News