செய்திகள்
கோப்பு படம்

மனைவி வயிற்றில் சுமப்பது பெண் குழந்தை என தெரிந்ததும் தலாக் கொடுத்த கணவர்

Published On 2019-11-14 11:50 GMT   |   Update On 2019-11-14 12:51 GMT
தனது மனைவி வயிற்றில் சுமப்பது பெண் குழந்தை என தெரிந்தது தலாக் என மூன்று முறை கூறி விவாகரத்து வழங்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள சோப்ரா பகுதியை சேர்ந்தவர் ஃபேர்ஷ்னா. இவருக்கு ஹலிப் என்பவருடன் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. இந்த தமபதியருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில், ஃபேர்ஷ்னா மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். தனது மனைவி வயிற்றில் சுமப்பது எந்த குழந்தை என்பதை தெரிந்து கொள்ள ஃபேர்ஷ்னாவை அவரது கணவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் பரிசோதனைக்கு உள்படுத்தியுள்ளார்.

பரிசோதனையின் முடிவில் தனது மனைவின் வயிற்றில் பெண் குழந்தை வளர்வதை ஹலிப் கண்டுபிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் ஃபேர்ஷ்னாவிடம் தலாக் தலாக் தலாக் என மூன்று முறை கூறி உன்னை விவாகரத்து செய்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, தனது கணவர் தன்னை தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டதாக ஃபேர்ஷ்னா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து ஹலிப் மற்றும் அவரது தாயார் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

முஸ்லிம் பெண்களை அவர்களுடைய கணவர்கள் ‘தலாக்’ என்று 3 முறை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி ‘தலாக்’ என கூறி விவாகரத்து செய்வது அதிகபட்சமாக 3 வருட சிறை தண்டனைக்குரிய குற்றமாகும்.
Tags:    

Similar News